குழப்பத்தில் தமிழக அரசு... உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசு கொரோனா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிக்கப்பட்டனர். இதனால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும் விவகாரத்தில் கூட தமிழக அரசு காலையில் ஒரு முடிவு மாலையில் ஒரு முடிவு என குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்