ரஜினி பற்றி பேச தொலைகாட்சிகள் பணம் தர வேண்டும்...சரத் கிண்டல்!

நடிகர் ரஜினியின் அரசியல் பேட்டி குறித்து நடிகர் சரத்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது, "தொலைகாட்சிகள் டி.ஆர்.பி ரேட்டிங் ஏற்றுவதற்காக ரஜினி பற்றி கேள்வி கேட்கிறீர்கள். அது குறித்து பதில் சொல்ல வேண்டுமானால் ரூ.5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்ட்டில் போடுங்கள் பேசுகின்றேன் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.  

நடிகர் சரத்குமார் தேனி மாவட்டம் தேவாரத்தில் நடைபெற்ற தனது கட்சி பிரமுகர் திருமண விழாவில் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். அதில் உள்ள சாராம்சங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் இறங்கி போராட நான் தயாராக இருக்கின்றேன்.   தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு மத்திய அரசு இன்னும் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே இந்தப் பணி ஜூன் 16-க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது. 

ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தொலைகாட்சிகள் டி.ஆர்.பி-யை ஏற்றுவதற்காக ரஜினி பற்றி கேள்வி கேட்கிறீர்கள். ரஜினி பற்றி பேச வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் என் அக்கவுண்டில் போடுங்கள். இப்போது நாட்டில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதைப் பற்றி கேளுங்கள் சொல்கிறேன்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்