காப்பாத்துங்க சார்… சட்டசபையில் துரைமுருகன் கிண்டல்!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய துரைமுருகன், "கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. போன் எடுத்தால் ஒருவர் இருமி கொரோனா என்கிறார். எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ளது. இந்நிலையில் ஒன்றும் இல்லை என சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்.

ஏசி-யில் இருந்தால் கூட கொரோனா பரவுமாம். அதனால் உறுப்பினர்கள் அனைவரும் பயத்தில் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்க எல்லாம் புள்ள குட்டிக்காரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடைத்தேர்தலை எதிர்கொள்வது சிரமம்" என்றார். உடனே சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

அதற்கு பதிலளித்த முதல்வர், "கொரோனா பாதிப்பு குறித்து அச்சம் வேண்டாம். 70 வயதுக்கு மேல் இருப்பதால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அச்சம் கொள்கிறார் போல. உரிய சிகிச்சை அளிக்க நாங்கள் தயார். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தான் பாதிப்பு இருக்கிறது. அதனால் அவர்களை பரிசோதனை செய்து வருகிறோம்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்