ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்.. சீமான் டுவீட்!

சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அரசியலில் தனது எதிர்காலத் திட்டம் குறித்து பேசினார். சிஷ்டம் சரியில்லை என்று, அரசியலில் மாற்றம் கண்டிப்பாகத் தேவை என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக கட்சி தொடங்கிய பிறகு தான் பின்பற்றப்போகும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் அரசியலுக்கு வருவேன் என்றார். கட்சி தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு போன்ற சில திட்டங்களையும் அறிவித்தார்.

ரஜினியின் அரசியல் கருத்துகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்துக்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்