இந்தியாவில் புரட்சி வெடிக்காது… ரஜினிக்கு எஸ்.வி.சேகர் பதிலடி!

சென்னை லீலா பேலஸில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதல்வர் பதவி குறித்து நான் நினைத்துகூட பார்த்தது கிடையாது. சட்டமன்றத்தில் உட்கார்ந்து பேசும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. எனக்கு அது செட் ஆகாது" என்றார். இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள எஸ்.வி.சேகர், "ஏன் குருமூர்த்தி அவர்களை முதலமைச்சராக்கி அழகு பார்க்க நினைக்கிறார்?!" என கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி வேற, ஆட்சி வேற என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், "கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது. இந்தியாவில் புரட்சி வெடிக்காது புஸ்வாணமாகிவிடும். கட்சி ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் சின்னம் முடங்கும். இதுவே வரலாறு" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்