தேர்தல் வரைதான் கட்சிப்பதவிகள்… ரஜினிகாந்தின் புதுத்திட்டம்!

சென்னை லீலா பேலஸில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தற்போதைய காலகட்டத்தில் அரசியல் மாற்றம் கண்டிப்பாக தேவை. சிஷ்டம் சரியில்லை. அதனை சரிசெய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும். அரசியல் மாற்றத்திற்கு மூன்று திட்டங்களை வைத்திருக்கின்றேன். 

மூன்று திட்டங்களில் ஒன்று, கட்சிப் பதவி தொடர்பானது. பெரிய அரசியல் கட்சிகளில் கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்ட கட்சிப் பதவிகள் இருக்கின்றன. இதில் ஒரு பதவிக்கு சராசரியாக 50 பேர் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்களது மொத்த எண்ணிக்கை 25 லட்சமாக இருக்கும். அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு இருப்பதால், அதிக அளவில் ஊழல் நடக்கிறது.

கட்சிப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெற்று தர கட்சிக்கு உதவுவார்கள். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவுதான் அதிகம். அதனால் தேர்தலுக்கு பிறகு கட்சிக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்