இளைஞர் ஒருவர்தான் எனது கட்சியின் முதல்வர் வேட்பாளர்...ரஜினியின் ஆசை!

கட்சித் தலைவராக மட்டுமே நான் பதவி வகிப்பேன். முதல்வராக இளைஞர் ஒருவரைத்தான் முன்னிறுத்துவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், "கட்சி தலைமை வேறு ஆட்சித் தலைமை வேறு என இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆட்சி சிறப்பானதாக இருக்கும். நான் என்றுமே பதவிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது. 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. 45 வயதிலேயே முதல்வர் பதவி ஆசை இல்லாமல் இருந்த நான், இப்போது 70 வயதில் பதவிக்கு ஆசைப்பட்டால் நான் பைத்தியக்காரன். ஆக இளைஞர் ஒருவரே எனது கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார்.  கட்சியின் தலைமைப் பொறுப்பை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன். நல்ல திறமையும் நேர்மையும் நிறைந்த இளைஞர் அது ஆணோ, பொண்ணோ அந்த இளைஞருக்குத் தான் முதல்வர் பதவி" எனக் குறிப்பிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்