தமிழகத்தில் அரசியல் புரட்சி வெடிக்கவேண்டும் ... ரஜினி ஆவேச அழைப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒன்றாக ரஜினிகாந்தின் சந்திப்பு இருந்தது. நீண்டநாட்களாக தம் மனதில் வைத்திருந்த அரசியல் கருத்துகளை எல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார் ரஜினி. கடந்த சில நாட்களாக பத்திரிகைகள் யூகித்தபடியே தமக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை என்று கூறி இருக்கிறார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்று விரும்புவதாக கூறி இருக்கிறார். 

செய்தியாளர் சந்திப்பில் ரஜினி, "அரசியல் கட்சிகளில் அதிக பதவிகளால் மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. தேர்தலுக்கு பிறகு கட்சிக்குத் தேவைப்படும் முக்கிய பதவிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலில் ஈடுப்படவேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே நாட்டில் அரசியலில் மாற்றம் நடைபெறும். தமிழகத்தில் மிக முக்கிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி,ஜெயலலிதா இ்ப்போது இல்லை. இப்போதுதான் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். நமது நாட்டில் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போவும் இல்லை. தமிழக அரசியலில் புரட்சி வெடிக்கவேண்டும்" என்று  கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்