ஏப்ரல் 14-ல் அரசியல் கட்சி தொடங்குகிறார் ரஜினி? முதல்வர் வேட்பாளர் யார்?

நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் பயணத்தின் அடுத்த கடடம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அனேகமாக வரும் ஏப்ரல் 14-ம் தேதி அரசியல் கட்சியின் தொடக்கவிழாவை அவர் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

அரசியலுக்கு வருவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி அறிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். இதுகுறித்த ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 5-ம் தேதி  நடைபெற்றது. அப்போது முதல்வர் வேட்பாளாரக வேறு ஒருவரை நிறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா என்று ரஜினி கேட்டதாகவும் அதற்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மாவட்டச் செயலாளர்களை இன்று மீண்டும் சந்தித்து பேசவுள்ளார். அப்போது தான் முதலைமைச்சர் ஆகப் போவதில்லை என ரஜினி அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ம் தேதி கட்சி தொடங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுதாகவும் கூறப்படுகிறது. கட்சி தொடங்குவது குறித்து தமககு நெருக்கமான தமிழருவி மணியன், காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்திருககிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்