என் வாழ்வின் இரண்டு திருப்புமுனைகள்... ஜோதிராதித்ய சிந்தியா பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். அவரை ஜே.பி.நட்டா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "என்னை பாஜக-வில் இணைத்துக் கொள்ள இடம் கொடுத்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஹே.பி.நட்டாவுக்கு நன்றி. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த என்னால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு அந்தக் கட்சி தான் காரணம்.

இப்போது இருக்கும் காங்கிரஸ் முன்பு இருந்தது போல் இல்லை. என் வாழ்க்கையில் இரண்டு திருப்புமுனைகள் நடந்துள்ளது. அதில் முதலாவது எனது தந்தையின் மரணம். இரண்டாவது பாஜக-வில் இணைந்துள்ளது’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்