அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘விருதுநகரில் நடந்த விழாவில் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம் என முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார். சிறுபான்மையினரின் இதயத் துடிப்பாக அதிமுக அரசு இருக்கிறது.
தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவருடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இணைந்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ரஜினியும், கமலும் இணைந்தால் மீண்டும் ’16 வயதினிலே’ படம் போன்ற படம் கிடைக்கலாம்.
முதல்வரின் நலத்திட்டங்களால் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. யார் கட்சி ஆரம்பித்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது’ என கூறியுள்ளார்.