அவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? யோகி ஆதித்யநாத் ஆவேசம்!

சிஏஏ-வுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். வன்முறையால் ஏற்பட்ட சேதத்துக்கு போராட்டக்காரர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய அவர், ‘காவல்துறையினரின் குண்டுகளுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. வன்முறையில் ஈடுபட்டவர்களின் துப்பாக்கி குண்டுகளால்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும்? மக்களை சுட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவர் வந்தால் அவர் உயிரிழப்பார். காவல்துறையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள். 

நான் ஜனநாயக ரீதியில் நடக்கும் போராட்டங்களை ஆதரிக்கக் கூடியவன். ஆனால் ஜனநாயகத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டு யாராவது ஜனநாயகத்தை தூண்டினால், அவர்களின் யுக்தியை போலவே நாங்கள் பதிலடி தருவோம்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்