அதிமுக ஓடி ஒளியும் கட்சி அல்ல… அமைச்சர் பேச்சு!

உ.வே.சா-வின் 166-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு அமைச்சர் ஜெயகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘ஜனநாயக ரீதியாக நடைபெறும் போராட்டங்களுக்கு தடை போட முடியாது. அதுமாதிரியான போராட்டங்கள் அனுமதிக்கப்படும். திமுக-வை போல் அதிமுக ஓடி ஒளியும் கட்சி கிடையாது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன், ‘தமிழ் வளர்ச்சிக்காக திமுக ஆட்சி காலத்தில் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு எட்டரை கோடி ரூபாய் பெறப்படுகிறது. தமிழ் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியைப் பெற, தமிழக முதல்வர் பழனிசாமி முயற்சி செய்து வருகிறார்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்