திதி கொடுப்பதற்காக மணம்செய்து ஒரே மாதத்தில் மனைவியை விரட்டியடித்த கணவர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகையை சேர்ந்த வசந்தா என்ற  பெண்ணை திருமணம் செய்த சங்கரன், தம் தாயின் திதிக்காதத்தான் உன்னை திருமணம் செய்தேன். அது முடிந்து விட்டதால் நீ வேண்டாம் என்று விரட்டி அடித்துள்ள கொடூரம் நடந்துள்ளது.   
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த வசந்தா. செவிலியர் படிப்பை முடித்த வசந்தா வேலைதேடி சென்னை சென்றுள்ளார். அங்கு வசந்தாவுக்கு  ஆதரவுகரம் கொடுத்த ஒரு குடும்பத்தினர் அவரை வேலையில் சேர்த்து விட்டுள்ளனர். அவர்களே சாந்தாவிற்கு நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சங்கரன் என்பரை 2014-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். 
இது குறித்து வசந்தா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒரு  புகார் அளித்துள்ளார். அதில்,
'கணவருடன் மாப்படுகையில் 1 மாதம் குடும்பம் நடத்தினேன். திடீரென்று சங்கரன் என்னை  வெறுத்து ஒதுக்கத் தொடங்கினார். சங்கரன் திருமணம் ஆகாமல் இருந்தபோது அவரது தாயார் இறந்துவிட்டார். தாய் இறந்து 1 வருடம் முடிவடையும்போது திதி கொடுப்பதற்கு திருமணம் செய்திருக்க வேண்டும் என்பதால் உன்னை திருமணம் செய்து தாயாருக்கு திதி கொடுத்துவிட்டேன் உன்னோடு வாழபிடிக்கவில்லை என்று கூறி வீட்டை விட்டு என்னை வெளியேற சொன்னார். ஆனால்  நான் வெளியேறவில்லை. இதனால் என்னை தனியே விட்டுவிட்டு சங்கரன் தன் தந்தையுடன் வேறு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் எனக்கு உதவி செய்ய வந்த வழக்கறிஞர், ராம்.முத்துக்குமார் என்பவர், நான் வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்கிவிட்டார். எனவே, என்னை வீட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டினார்.  நான் கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டை அடியாட்களுடன் வந்து ராம். முத்துக்குமார் ஜே.சி;.பி எந்திரம் மூலம்இடித்து விட்டார். வீட்டிலிருந்த பொருட்கள், வழக்குக்கான ஆதாரங்கள் அனைத்தும் பாழாகிவிட்டது. தங்க வழியின்றி நிர்கதியாக வீதியில் நிற்கும் எனக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்' என்று கூறி உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்