ஓபிஎஸ் எப்போது மாடு பிடித்தார்... துரைமுருகன் கிண்டல்!

2020-21-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், ‘ஓ.பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சுகாதாராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘போராட்டம் நடந்த போது, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு சட்டம் நிறைவேற்றி தந்த காரணத்தால்தான் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கிறார்கள். துரைமுருகன் புதுக்கோட்டையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க வந்தால் அதற்கான ஏற்பாடுகளை செய்து தருவேன்’ என்றார்.

ஓபிஎஸ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு மாடு பிடித்தால், அதனை நாங்கள் உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று காண ஆவலுடன் இருக்கிறோம் என துரைமுருகன் கூறினார். இதனையடுத்து பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்