சிஏஏ விவகாரத்தில் முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக வெளிநடப்பு


குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக  சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக எம்.ஏல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்

சிஏஏ-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது குறித்து சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், 'போராட்டக்காரர்கள் அனுமதி பெறாமல் போரட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது கற்கள், தண்ணீர் பட்டில்களை கொண்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்' என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து குறுக்கிட்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  'போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஆளும்கட்சி விஷம பிரச்சாரம் செய்கிறது. குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பான திமுக-வின் கோரிக்கையை ஏற்க மறுத்தது சட்ட விதிகளுக்கு எதிரானது' என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் இருந்து திமுக எம்.ஏல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்