மத்திய அரசிடம் அதிமுக-வை போல், திமுக ஒட்டி உறவாடவில்லை... துரைமுருகன் பேச்சு

நாடளுமன்றத்தில் அதிக எம்பி-க்களை கொண்டுள்ள திமுக மத்திய அரசிடம் வாதிட்டு டெல்டா வேளாண் மண்டலத்துக்கு அனுமதி வாங்கி தர வேண்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் தங்கமணி, 'முதலமைச்சர் ஒரு விவசாயியாக இருப்பதால்தான் காவிரியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார் 'என தெரிவித்தார்.

 அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், 'வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பின் அறிவித்திருந்தால் வரவேற்றிருப்போம்' என்றார். 

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நாடாளுமன்றத்தில் அதிக எம்பி-க்களை கொண்டுள்ள திமுக மத்திய அரசிடம் வாதிட்டு , வேளாண் மண்டலத்துக்கு அனுமதி பெற்று தரவேண்டும்' என கூறினார். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், 'அதிமுக-வை போல நாங்கள் மத்திய அரசிடம் ஒட்டி உறவாடவில்லை எதிரும், புதிருமாக இருக்கிறோம்' என பேசினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்