கொரோனாவை விட கொடூரமான வைரஸ்… சஞ்சய் தத் விமர்சனம்!

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளும் இந்த சட்டம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, பாஜக அரசை இந்துத்துவ அமைப்புகள் இயக்குவதை உறுதி செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய முதல் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. இந்த சட்டத்தை திரும்பப் பெற முடியாது என பிரதமர் கூறியிருப்பது அவர் ஒரு சர்வாதிகாரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்து வருகிறது. கொரோனாவை விட கொடூரமான வைரஸ் நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இதனை பற்றி பிரதமருக்கு கொஞ்சம் கூட கவலை இல்லை’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்