மாநிலங்களவை எம்.பி-யாகும் பிரியங்கா காந்தி..?

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு எம்.பி.பதவி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநிலங்களவையில் தற்போது உறுப்பினர்களாக இருப்பவர்களில் 51 பேரின் பதவிகாலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. ஜூன் மாதம் 5 பேரின் பதவிகாலமும், ஜூலை மாதம் ஒரு உறுப்பினரின் பதவிகாலமும்,  நவம்பர் மாதம் 11 பேரின் பதவி காலமும் முடிவடைகிறது.  இந்த ஆண்டு மட்டும் 68 பேரின் பதவிகாலம் முடிவடைகிறது. 

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மோதிலால் வோரா, மதுசூதன் மிஸ்த்ரி, குமாரி செல்ஜா, திக்விஜய் சிங், ஹரிபிரசாத், ராஜீவ் கவுடா ஆகியோரின் பதவி காலம் முடிவடைய உள்ளது.  இதில் திக்விஜய் சிங், மோதிலால் வோரா, குமாரி செல்ஜா ஆகியோருக்கு மீண்டும் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் மாநிலங்களவை எம்.பி பதவி வழங்க அந்தக் கட்சி ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து பிரியங்கா காந்திக்கு எம்.பி பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்