ரஜினிக்கு ராசியாகுமா மதுரை ? அமைச்சரின் அதிரடி கருத்து!

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமங்கலம் பகுதியில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழக பட்ஜெட் கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல், மக்களை கவரும் திட்டங்கள் கொண்ட பட்ஜெட் ஆக அமைந்துள்ளது.
தமிழகத்தில் இஸ்லாமியர் மீது ஒரு துரும்பு கூட படாத வகையில் பாதுகாத்து வருகிறோம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகின்றன’ என்றார்.
மதுரையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் தொடக்க விழா நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ‘ராசியான நகரமாக திகழும் மதுரை, ரஜினிக்கும் ராசியாகுமா என்பது பின்னரே தெரியவரும்’ என கூறியுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு