தேவைப்பட்டால் சிறை செல்வேன்… ராஜஸ்தான் முதல்வர் அதிரடி!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு திடீரென சென்ற முதல்வர் அசோக் கெலட் போராட்டக்காரர்களிடம் பேசினார். அவர் பேசும் போது, ‘நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க சிஏஏவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு, தாமே முன்வந்து சிஏஏ-வை திரும்ப பெற வேண்டும். 

நாங்கள் போராட்டக்காரர்களின் பக்கம் இருப்போம். தேவைப்பட்டால் முதல் ஆளாக நானே சிறைக்கு செல்வேன். என்.ஆர்.பி.,க்கு பெற்றோரின் பிறப்பிடம் பற்றி தகவல் கேட்கிறார்கள். ஒருவேளை என்னால் தர முடியவில்லை என்றால் நானும் தடுப்பு காவலில் இருக்க தயார்.

 சட்டங்களை உருவாக்கும் உரிமை அரசுக்கு உண்டு. ஆனால் மக்கள் உணர்வுகளின் அடிப்படையில்தான் ஆட்சி அமைய வேண்டும். மக்களின் மனநிலையை அரசு புரிந்து கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்