ஜப்பான் துறைமுகத்தில் உள்ள கப்பலில் தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றுக.. மு.க.ஸ்டாலின் கோரிக்கை

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏரளமனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 3,711 பேருடன் ஜப்பான் நோக்கி சென்ற சொகுசு கப்பல், கொரோனா வைரஸ் காரணமாக ஜப்பான் கடல் பகுதியில் தனிமை படுத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதில் ஏராளமான இந்தியர்கள் சிக்கி தவிப்பதாகவும் அவர்களை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என  திமுக தலைவர் முக.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்