கட்டிப்பிடி தினம்.. பாஜகவுக்கு காங்கிரஸின் மெசேஜ்!

கடந்த ஆண்டில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது, ராகுல்காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். வெறுப்பு பிரச்சாரத்தை கைவிடுங்கள் என்றும் அனைவர் மீதும் அன்பை வெளிப்படுத்துங்கள் என்றும் கூறினார். இறுதியாக அவர் பிரதமர் மோடியை கட்டியணைத்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இன்று கட்டிப்பிடி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியை ராகுல் கட்டியணைக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதில், ‘கட்டிப்பிடி தினத்தன்று பாஜகவுக்கு நாங்கள் ஒரு செய்தி வைத்திருக்கிறோம். நீங்கள் என்னை வெறுத்தாலும், அடித்தாலும் நான் உங்கள் மீது அன்பு செலுத்துவேன்’ என ராகுல் பேசிய வீடியோவையும் இணைத்துள்ளனர்.

காங்கிரஸ் அன்பை நம்புவதாகவும், வெறுப்பை அல்ல எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.37%
  • தவறானது
    18.81%
  • வழக்கமான விமர்சனம் தான்
    18.22%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்