இது இந்தியாவின் வெற்றி.. கெஜ்ரிவால் மகிழ்ச்சி!

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 63 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி டெல்லியில் பொறுப்பேற்க உள்ளது.

இதனால் அக்கட்சி தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘எனது குடும்பத்தினருக்கும் ,மக்களுக்கும், கடவுள் ஹனுமனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை உங்களது மகனாக நினைத்தவர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் கிடைத்த வெற்றி தான் இது. இந்த வெற்றி டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர்களுக்கான வெற்றி.

இந்த தேர்தல் முடிவுகள் மூலம் புதுமாதிரியான அரசியல் பிறக்க வழி கிடைத்துள்ளது. அனைவருக்கும் தெளிவான செய்தியை டெல்லி அனுப்பியுள்ளது. இது டெல்லியின் வெற்றி மட்டுமல்லாமல், இந்தியாவின் வெற்றியும் கூட. கடவுள் ஹனுமன் நம்மை காப்பாற்றியுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்