ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது உறுதி… தமிழருவி மணியன் ஓபன் டாக்

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் கட்சி தொடங்கி ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்த உள்ளதாக தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

கடந்த 2018ம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த அறிவித்தார். அத்துடன் வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்திருந்தார். இதற்காக நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்று கட்சியை தொடங்குவதற்கான ஆரம்ப பணிகளை தொடர்ந்து வந்தார். சமீபத்தில் கூட பெரியார் கருத்து, குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு ஆதரவு என ரஜினி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. 

இந்நிலையில் ரஜினியின் அரசியல் ஆலோசகராக கருதப்படும் தமிழருவி மணியன், சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பற்றி விரிவான பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், வரும்  ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாகவும், ஆகஸ்டில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், ரஜினி தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக பாஜக உடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ரஜினியே முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும் தமிழருவி தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியனின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்