கருத்துக் கணிப்புகள் பொய்யாகி போகும்.. பாஜக உறுதி!

கருத்துக் கணிப்புகள் பொய்யாகி போகும்.. பாஜக உறுதி!

டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 56 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற குழு உறுப்பிபர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆலோசனை நடத்தினர்.  அதன் பிறகு மீனாட்சி லேகி கூறுகையில், ‘கருத்துக்கணிப்பு சரியான கணிப்பு கிடையாது. மாலை 4 மணி முதல் 5 வரை மட்டுமே புள்ளி விபரம் எடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் கருத்துக்கணிப்புகள் பொய்யானது உண்டு. எங்கள் கட்சி வாக்காளர்கள் தாமாகவே வந்து வாக்களித்தனர். டெல்லியல் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்’ என்றார்.

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறும் போது, ‘இந்த கருத்துக்கணிப்புகள் வாக்குகள் எண்ணப்படும் போது பொய்யாகி விடும். தோராயமாக கணக்கிடப்பட்ட கருத்துக்கணிப்புகள் துடைப்பத்தால் துடைத்து எறியப்படும். தயவுசெய்து இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழிபோடாதீர்கள்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்