திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதி!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதி!

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு
கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணி கட்சிகள் இறுதியாகிவிட்டன.
இப்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காங்கிரசுக்கு 10 தொகுதிகள்
ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. இதர கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வது குறித்து
முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

2ம் கட்டமாக இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களான முத்தரசன், சுப்பராயன்  ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்திய
கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது தென்காசி, நாகை, கோவை ஆகிய
3 தொகுதிகளில் இரண்டை எங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டு கோரிக்கை
விடுத்துள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com