அரசியல்
லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி விருப்ப மனுத்தாக்கல்!
லோக்சபா தேர்தலில் போட்டியிட கனிமொழி விருப்ப மனுத்தாக்கல்!
வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக எம்.பி கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட, அவர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.