பாஜகவுக்கான, அதிமுகவின் தொகுதிப்பங்கீடு அதிருப்தியை ஏற்படுத்தவில்லை: பொன் இராதாகிருஷ்ணன்!

அ.தி.மு.க.,வின் தொகுதிப்பங்கீடு அதிருப்தியை ஏற்படுத்தவில்லை: பொன் இராதாகிருஷ்ணன்!

அதிமுக கூட்டணி மார்ச் 6ம் தேதிக்குள் இறுதி வடிவம் பெறும் என மத்திய இணையமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

தேமுதிகவுடனான கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக விரைவில் அதிமுக கூட்டணிக்கு வரும் என அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணி மார்ச் 6ம் தேதிக்குள் இறுதி வடிவம் பெறும் என மத்திய இணையமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது எந்த வகையிலும் அதிருப்தியை ஏற்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com