வரும் மக்களவை தேர்தலில் அமமுக அதிக இடங்களில் மாபெரும் வெற்றி பெறும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என அரசியல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக-பாஜக-பாமக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.அதே போல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.
இந்நிலையில் விருதுநகர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என டிடிவி தினகரன் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அமமுக, நாடாளுமன்ற தொகுதியில் அதிக இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப் போகிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.