உயிருடன் புதைப்பேன்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் சில பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக பேரணி மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் அம்மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் தலைமையில் சிஏஏவுக்கு ஆதரவான பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ரகுராஜ் சிங், ‘ஒரு சதவீத மக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எல்லாம் எங்களுடைய வரிகளில் சாப்பிட்டு விட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். 

பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷம் எழுப்பினால் அவர்களை உயிருடன் புதைப்பேன். இந்த நாடு இந்து மக்களுக்கு சொந்தமானது’ என கூறியுள்ளார். அவர் பேசியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்