சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நல்லது தான்.. சுப்ரமணியன் சுவாமி!

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நல்லது தான்.. சுப்ரமணியன் சுவாமி!

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தும் பேரணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியிரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது நல்லது தான் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர், ‘பல்வேறு எதிர்க்கட்சிகள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வருகின்றன. இது தேர்தல்களில் பாஜகவுக்கு நல்லது. இந்த போராட்டங்கள் தொடர்ந்தால் ஸ்ரீ420 (கெஜ்ரிவால்) டெல்லி மாநில தேர்தலில் தோல்வியடையக் கூடும்’ என கூறியுள்ளார்.

அதனால் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் பாஜகவுக்கு சாதகமாக தான் அமையும் என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்