ரஜினி பெருமைமிகு தமிழர்.. கமல் புகழாரம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல் மற்றும் ரஜினிகாந்த் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ‘திராவிட அரசியலை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். காலத்தின் தேவையாக இருந்த அரசியல் இன்று தனிநபர்களின் தேவையாக மாறிவிட்டது. எனது நண்பர் ரஜினிக்கு தமிழகம் நிறைய உதவி செய்தது. தற்போது அவர் தமிழகத்துக்கு உதவ வேண்டும். அவர் எங்கோ பிறந்திருந்தாலும், இப்போது பெருமைமிகு தமிழர் ஆகிவிட்டார்’ என்றார். 

ரஜினி பற்றிய அவரது கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கமல், ‘தமிழ்நாட்டிற்கு எல்லா தமிழர்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். எல்லோருக்கும் நான் பொதுவாக கூறினேன். அது ரஜினிக்கும் பொருந்தும். அந்த கடமை அவருக்கு உள்ளது’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்