மோடியின் நிதிநிலை குறித்த ஆலோசனை அனைத்தும் கோடீஸ்வர்களுக்காகவே; ராகுல்காந்தி!

மோடியின் நிதிநிலை குறித்த ஆலோசனை அனைத்தும் கோடீஸ்வர்களுக்காகவே; ராகுல்காந்தி!

நாட்டின் நிதிநிலை அறிக்கை குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனைகள் அனைத்தும்  கோடீஸ்வர நண்பர்களுக்காகவே என்று காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாகச் சரியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இந்தநிலையில்,  மத்திய பட்ஜெட் தொடா்பாக, பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களை பிரதமா் நரேந்திர மோடி பல கட்டங்களாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவா்களை அவா் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அவா்களுடன் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் ஆலோசனைகள் எல்லாம் அவரது கோடீஸ்வர நண்பர்களுக்காகத்தானே தவிர, விவசாயிகளுக்காகவோ, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நடுத்தர மக்களுக்காகவோ அல்ல என்று ராகுல் கூறியுள்ளார்.மேலும் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களின் கருத்துகளையோ, குரல்களையோ கேட்க பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லை என்றும் ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்