கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க இயலாது; சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோரை விடுவிக்க இயலாது  என்றுகூறி சென்னை சிறப்பு நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்தது.

2015-2016 நிதி ஆண்டிற்கான வருமானத்தை மறைத்ததாக கார்த்தி சிதம்பரம் - மனைவி ஸ்ரீநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி  கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை விசாரித்த சிறப்பு நீதிபதிமன்றம், வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி உள்ளிட்டோரை விடுவிக்க இயலாது  என்றும் மேலும் அவர்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், அடுத்த விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
    59.49%
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
    29.75%
  • அதிருப்தி
    4.43%
  • கருத்து சொல்ல விரும்பவில்லை
    6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்