சிவனை போல் அனைத்தும் தெரிந்தவன் யான்… சீமான் பேச்சு!

சிவனை போல் அனைத்தும் தெரிந்தவன் யான்… சீமான் பேச்சு!

உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜமங்கலம் ஒன்றியத்தில் வார்டு உறுப்பினர் பதவியை நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது. இது தவிர பஞ்சாயத்து அளவில் 100க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பூந்தமல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய சீமான், ‘பாலியல் குற்றச்சாட்டு வந்தால் எந்த கொம்பனாக இருந்தாலும் கட்சியில் இடம் கிடையாது. நீக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் நீங்களே போய் விடுங்கள். கட்சியில் வேலை செய்கிறவன் செய்யாதவன் என்று தான் பார்ப்போம். 

கட்சியிலிருந்து ஒருவன் நீக்கப்பட்டால் அவரது வேலை மதிப்பீடு பொருத்தே அது அமையும். ஏதோ சென்னையில் ஒரு மூலையில் இருக்கிறான். இவனுக்கு எப்படி நாம் வேலை செய்வது தெரியும் என நினைக்க வேண்டாம். சிவனை போல் அனைத்தும் தெரிந்தவன் யான்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்