சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சுயேச்சை வேட்பாளர்!

சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சுயேச்சை வேட்பாளர்!

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்று வருகிறது.  அதன்படி மதுரை மாவட்டத்திலும் வார்டு கவுன்சிலர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது. 

உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அரவிந்த் என்பவர் போட்டியிட்டார். பொறியியல் பட்டதாரி இளைஞரான இவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் இன்று பதவியேற்றவுடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவியேற்ற உடனே அவர் தப்பியோடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்