22 ஆண்டு கால சேவை... மக்கள் அளித்த பரிசு!

திருப்பூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சியில் கடந்த 1990 முதல் தண்ணீர் திறந்துவிடும் டேங்க் ஆப்பரேட்டராக பணிபுரிந்தவர் 55 வயதான பழனிசாமி. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்நிலையில் அங்கு பதிவான 2,403 வாக்குகளில் 1,577 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் மக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இதுபற்றி அவர் கூறும் போது, ‘கடந்த 22 ஆண்டுகளாக மக்களோடு மக்களாக இருந்து தண்ணீர் திறந்து விடும் பணியை செய்கிறேன். அவ்வப்போது துப்புரவு பணியிலும் ஈடுபடுகிறேன். மக்களின் தேவைகள் எனக்கு நன்கு தெரியும். அதனால் தான் நானே ஊராட்சி மன்ற தலைவராகி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற யோசனை வந்தது.

அதனால் ஊர் மக்கள் அனுமதியுடன் எனது பணியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டேன். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன். அதற்கான அங்கீகாரமாக இந்த வெற்றியை கருதுகிறேன். மக்கள் சேவகனாக எனது பணியை தொடர்வேன்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்