ஓ.பி.ரவிந்திரநாத் மீது நடவடிக்கை எடுங்கள்.. அதிமுக முன்னாள் எம்.பி காட்டம்!

முத்தலாக் தடை மசோதாவை பாஜக அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது லோக் சபாவில் பேசிய அதிமுக உறுப்பினர் ஓ.பி.ரவிந்திரநாத், முத்தலாக் தடை மசோதா பெண்களுக்கு சம உரிமை வழங்கும் என ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார். ஆனால் மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அதிமுகவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறும் போது, ‘முத்தலாக் தடை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ரவிந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மசோதாவை ஆதரித்து பன்னீர் செல்வமே பேசியிருந்தாலும் அது தவறு தான்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்