அரசியல்
ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்.. பொன்.ராதா ஆர்வம்..
ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும்.. பொன்.ராதா ஆர்வம்..
அதே சமயம், அவரை கட்சியில் அழைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என்றார்.
புதுக்கோட்டையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ரஜினிகாந்த், ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்று சொன்னால், நிச்சயமாக நான் மகிழ்ச்சி அடைவேன். பாராட்டு தெரிவிப்பேன். ஆனால், என்னுடைய விருப்பம், ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதுதான். இதனை ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லி வருகிறேன். அதே சமயம், அவரை கட்சியில் அழைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என்றார்.