ஜோ லிண்ட்னர் மரணம்: ஜோஸ்தெடிக்ஸ் புகழ் யூடியூப் பாடிபில்டர் 30 வயதில் இறந்தது எப்படி?

ஜோ லிண்ட்னர் மரணம்: ஜோஸ்தெடிக்ஸ் புகழ்  யூடியூப் பாடிபில்டர் 30 வயதில் இறந்தது எப்படி?

ஜோஸ்டெடிக்ஸ் என்று அழைக்கப்படும் பாடிபில்டர் ஜோ லிண்ட்னர் 30 வயதில் இறந்தார். அவரது காதலி நிச்சா இன்ஸ்டாகிராமில் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார். ஜோ லிண்ட்னர் திடீர் அனீரிசிம் காரணமாக இறந்தார் என்பதை அவர் கூறியுள்ளார். நிச்சா தனது இதயப்பூர்வமான ஒரு பதிவில் "இந்த உலகில் உள்ள அற்புதமான மற்றும் நம்பமுடியாத நபருக்கு அஞ்சலி’’ எனத் தெரிவித்து இருந்தார். அவருடன் கழித்த கடைசி தருணங்களையும் நினைவு கூர்ந்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் இடுகையில் அபிமான மற்றும் வேடிக்கையான படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். "நேற்று அவர் நெஞ்சுவலியால் காலமானார். நான் அப்போது அவருடன் அறையில் இருந்தேன். அவர் எனக்காக செய்து கொடுத்த நகையை என் கழுத்தில் அணிவித்தார். பிறகு நாங்கள் கட்டிப்பிடித்து படுத்திருந்தோம். நோயலைச் சந்திக்கும் நேரத்திற்காக காத்திருந்தோம். 16.00 மணிக்கு ஜிம்மில் அவர் என் கைகளில் இருந்தார். இது மிக வேகமாக நடக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு அவர் கழுத்து வலிக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நாங்கள் அதை உண்மையில் உணரவில்லை’’என்று கூறியிருந்தார்.

மேலும், தனது பதிவில், நிச்சா, ஜோ லிண்ட்னரைப் பாராட்டினார்.“இந்த நேரத்தில் என்னால் அதிகம் எதுவும் எழுத முடியவில்லை. இந்த மனிதர் நீங்கள் அறிந்ததை விட நான் அறிந்தது அதிகம் என்று என்னை நம்புங்கள். அவர் அனைவரின் மீதும் நம்பிக்கை கொண்டவர். குறிப்பாக என்னை... நான் சிறப்பாகவும் இந்த உலகில் ஒருவராகவும் இருக்க முடியும் என்று அவர் என்னை நம்பி இருந்தார்’’ எனப் பதிவிட்டு இருந்தார்.

ஜோ லிண்ட்னர் பற்றிய ஐந்து உண்மைகள் இங்கே:

ஜோ லிண்ட்னர் அல்லது ஜோஸ்தெடிக்ஸ் ஒரு ஜெர்மன் பாடிபில்டர் ஆவார். அவர் ஒரு ஃபிட்னஸ் மாடல் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு மிகுந்தவர். அவர் உடற்பயிற்சி தொடர்பான குறிப்புகள், தந்திரங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு பிரபலமானவர். பாடிபில்டிங் உலகில் நுழைவதற்கு முன்பு, அவர் ஒரு கிளப்பில் பவுன்சராக பணியாற்றினார். அவர் ஏலியன் கெய்ன்ஸ் என்ற தனிப்பட்ட பயிற்சி செயலியின் உரிமையாளராக இருந்தார்.

ஒரு யூடியூப் வீடியோவில், பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பவே, பல்வேறு பயிற்சியாளர்கள் அவரைக் குறிவைத்து கேள்வி எழுப்பியபோது, அவர் ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டார். ஜோவின் ரசிகர்கள் அவரது உடல் தோற்றத்தை நடிகர் மற்றும் முன்னாள் பாடிபில்டர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கருடன் ஒப்பிட்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com