ஆந்திரா: காட்டு யானை தாக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு - ஒரே கிராமத்தில் நிகழ்ந்த சோகம்

ஆந்திராவில் காட்டு யானை தாக்கியதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானை தாக்கி உயிரிழந்தவர்கள்
யானை தாக்கி உயிரிழந்தவர்கள்

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரா. இவரது மனைவி உஷா. இன்று காலை உஷா உள்ளிட்ட 4 பேர் பெங்களூருவுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

மல்லனூர் கிராமத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த காட்டு யானை அவர்களை விரட்டி வந்துள்ளது. இதைப் பார்த்ததும் அனைவரும் தப்பியோடிய நிலையில், உஷா ஓட முடியாமல் அங்கேயே தவறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து விரட்டி வந்த காட்டு யானை உஷாவை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த போலீசார் உஷாவின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உஷா உயிரிழந்த சிறிது நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றுள்ளார்.

அப்போது புதருக்குள் இருந்து வெளியில் வந்த காட்டு யானை திடீரென தாக்கியதில் சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே பகுதியைச் சேர்ந்த 2 பேர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com