அடம் பிடித்த காதலியைக் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்- கேரளாவில் பயங்கரம்
கேரளாவில் பெண் அழகு கலை நிபுணர், தன் காதலனால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த காதலன் போலீசில் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உடுமபாரா என்னும் பகுதியை சேர்ந்தவர் தேவிகா(34). அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அதுபோல காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் என்னும் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தேவிகாவும், சதீஷும் 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் காதலியான தேவிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலன் சதீஷ் ஆவூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சதீஷும், தேவிகாவும் ஏற்கனவே வேறொரு நபர்களுடன் திருமணம் ஆனவர்கள் என்றும், இவர்கள் இருவரும் சில வருடங்களாக தகாத உறவில் இருந்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அன்று காசர்கோடு பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் சந்தித்த நிலையில், அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சதீஷ் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
இந்நிலையில் கொலைக்கான காரணம் குறித்து சதீஷ், முன்னதாக ஒரு நாள் தனது குழந்தையை சந்தித்துள்ள தேவிகாவிற்கு, குழந்தை பிடித்து போக தனக்கு தந்துவிடச்சொல்லி தொடர்ந்து நச்சரித்து வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் தான் கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
கொலை செய்தது மட்டுமல்லாமல் காவல் நிலையத்திற்கு சென்று தான் கொலை செய்ததாகவும் சரணடைந்த சதீஷின் வாக்குமூலத்தின் பேரில் தனியார் விடுதியில் சென்று ஆய்வு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் காதலன் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.