காசியாபாத் அருகே டெல்லி-மீரட் விரைவு சாலையில் பள்ளி பேருந்தும் கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
காவல்துறை அறிக்கையின்படி, பள்ளி பேருந்து காலியாக தவறான திசையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. டெல்லி மீரட் விரைவுச் சாலையில் காலை 6.00 மணியளவில் பள்ளி பேருந்து மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானது. காஜிபூர் அருகே டெல்லியில் இருந்து எரிபொருள் நிரப்பிவிட்டு பேருந்து ஓட்டுநர் தவறான திசையில் வந்து கொண்டிருந்தார். காரில் இருந்தவர்கள் மீரட்டில் இருந்து வந்து கொண்டிருந்தனர். குர்கானுக்குச் செல்லும் வழியில் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநர் பிடிபட்டார். முழு தவறும் தவறான திசையில் வந்த பேருந்து ஓட்டுநருடையது’’ என ஏ.டி.சி.பி. போக்குவரத்து போலீசார் ராமானந்த் குஷ்வாஹா தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகள் அடங்குவதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
"இறந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். பெண்களும் ஆண்களும் அடங்குவர். 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரில் 8 பேர் இருந்தனர். அந்த பேருந்து நொய்டாவில் உள்ள பால்பாரதி பள்ளி பேருந்துக்குச் சொந்தமானது.
முன்னதாக, பிரதாப்கரில் அதிவேகமாக வந்த டேங்கர் டெம்போ மீது மோதியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விபத்து லக்னோ -வாரணாசி நெடுஞ்சாலையில் மோகன்கஞ்ச் மார்க்கெட் அருகே பிரதாப்கரில் உள்ள லீலாபூர் காவல் நிலையப் பகுதியில் நடந்தது.