"நான் பிரார்த்தனை செய்கிறேன் ... அவள் அங்கேயே இறக்கட்டும்" என்று பாகிஸ்தானியரை திருமணம் செய்து கொண்ட இந்தியப்பெண் அஞ்சுவின் தந்தை தாமஸ் மனம் வருந்தியுள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குச் சென்று செவ்வாயன்று தனது பேஸ்புக் நண்பரை மணந்த திருமணமான இந்தியப் பெண்ணான அஞ்சுவின் தந்தை, தாமஸ், ‘அஞ்சு இறந்து ப்னால் எனது குடும்பத்திற்கு நல்லதாக இருக்கும்’எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள பௌனா கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது தந்தை கயா பிரசாத் தாமஸ், ‘‘அஞ்சு தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தை அழித்துவிட்டார். இரண்டு குழந்தைகளையும், கணவனையும் விட்டுவிட்டு ஓடிய விதத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதை செய்ய வேண்டுமானால் முதலில் தன் கணவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும். அவள் எங்களுக்கு உயிருடன் இல்லை" என்று அவர் கூறினார்.
அஞ்சு இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டாரா? என்று கேட்டபோது, ‘‘இது தொடர்பாக தனக்கு எந்த தகவலும் இல்லை’’எனத் தெரிவித்த அவர், "அவளுடைய பிள்ளைகள், கணவனுக்கு என்ன நடக்கும்? அவள் குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? 13 வயது சிறுமி மற்றும் ஐந்து வயது பையன்? அவள் குழந்தைகளின் மற்றும் கணவரின் எதிர்காலத்தை அழித்துவிட்டாள். அவள் குழந்தைகளை யார் கவனிப்பார்கள். நாங்கள் அவர்களை வளர்க்க வேண்டும்’’என்றார்/
‘அவரைத் திரும்ப அழைத்து வர இந்திய அரசிடம் முறையிடுவீர்களா?’’எனக் கேட்டதற்கு, ‘’அப்படி எதுவும் செய்ய மாட்டேன். நான் பிரார்த்தனை செய்கிறேன். அவள் அங்கேயே இறக்க வேண்டும். நான் அஞ்சுவிடம் பேசவில்லை. அவரது தாயிடம் மட்டுமே பேசுகிறார். அவளுக்கு எப்படி பாஸ்போர்ட் கிடைத்தது? எப்போது விசா கிடைத்தது? என்று எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எஃப்) முக்கியப் பிரிவான தேக்கன்பூர் நகருக்கு அருகில் அவரது கிராமம் இருப்பதால், இந்தச் சம்பவத்தில் ஏதாவது இருக்கலாம் என்று சிலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால் இதனை தாமஸ் கடுமையாக நிராகரித்தார்.
"எங்களிடம் யாரும் இதுபோன்ற பிரச்சினையை எழுப்பவில்லை. நீங்கள் (ஊடகங்கள்) மட்டுமே இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள். என் குழந்தைகளுக்கு எந்த குற்றப்போக்குகளும் இல்லை. இந்த விஷயத்தில் எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
திங்களன்று, தாமஸ் தனது மகளை "மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் விசித்திரமானவர்" என்று விவரித்தார். அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது ஃபேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் முந்தைய நாள் ஒரு தகவல் வெளியானது.
34 வயதான இந்தியப் பெண், கைபர் பக்துன்க்வாவின் அப்பர் டிர் மாவட்டத்தில் உள்ள தனது 29 வயது பாகிஸ்தான் நண்பரான நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று திருமணம் செய்து கொண்டார்.