‘2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும்’ - ரிசர்வ் வங்கி

வருகிற 23 ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும், வரும் 2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரும் 2023 செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளின் வாயிலாக திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் ‘ஆர்.பி.ஐ சட்டவிதிப்படி 24 (1)ன் படி கடந்த 2016ம் ஆண்டு ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் கடந்த 2018–2019ம் ஆண்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கையின்படி ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் 2 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகள் தற்போது செல்லுபடி ஆகும். மே 23ம் தேதி முதல் எந்த வங்கியிலும் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை மற்ற ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கியின் கிளையிலும் வேறு வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் கட்டுப்பாடு இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல் மற்றும் சட்ட விதிக்கு உட்பட்டு செய்யலாம்.

பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்கிட, அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றிக்கொள்ளும் வசதியை வழங்க வேண்டும்.

இதுதொடர்பான முறையான தனி வழிகாட்டுதல்கள் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது’ என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com