ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டமன்றத் தொகுதி, தாண்டா (வீரணமலை) ஊராட்சி மன்றத்தலைவர் மோகன் நாயக். இவர், தன்னை மோசமான முறையில் பாலியல் தொல்லை செய்து மிரட்டியதாக தமிழ்ப் பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுக்கும் வீடியோ தெலுகு வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான மோகன் நாயக் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ பற்றிய தகவல் உயரதிகாரிகள் பார்வைக்கு சென்றுள்ளது.
ஆனால் ஆளும் கட்சி பிரமுகர் என்பதால் போலீசார் அமைதி காத்துள்ளனர். இதுதொடர்பாக குப்பம் தொகுதி எம்.எல்.ஏ-வும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான தலைவருமான சந்திரபாபு நாயுடு களத்தில் குதித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று தலைமறைவாக உள்ள மோகன் நாயக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அவரை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொடியச் சம்பவத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அதே சமயம், மோகன் நாயக்கின் தலைவர் பதவி பறிக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
- அன்புவேலாயுதம்