காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்: குடும்பம் நடத்தியவர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சீமா குலாம் ஹைதர் என்கிற அந்தப் பெண் இந்தியாவைச் சேர்ந்த சச்சினை கேமிங் செயலியான PUBG-யில் அறிமுகமாகி உள்ளார்.
பாகிஸ்தான் காதலி சீமா ஹைதர்
பாகிஸ்தான் காதலி சீமா ஹைதர்

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், நொய்டாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து அவரை கரம் பிடிப்பதற்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். சீமா குலாம் ஹைதர் என்கிற அந்தப் பெண் இந்தியாவைச் சேர்ந்த சச்சினை கேமிங் செயலியான PUBG-யில் அறிமுகமாகி உள்ளார். பின்னர் நட்பாகி காதலாகி கசிந்துருகி உள்ளனர்.

மே மாதம், 27 வயதான பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், தனது நான்கு குழந்தைகளுடன் கராச்சியிலிருந்து புறப்பட்டார். அவர்கள் துபாய்க்கு ஒரு விமானத்திலும், காத்மாண்டுவுக்கு இணைக்கும் விமானத்திலும் வந்துள்ளனர். நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் முதலில் உத்தரபிரதேசத்திற்குள் வந்து பின்னர் பேருந்தில் கிரேட்டர் நொய்டாவை அடைந்தார். 3 குழந்தைகளுடன் இந்திய எல்லையைக் கடந்தபோது அந்தப் பெண் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை.

20 வயதிற்குள் இருக்கும் சீமா, நொய்டாவில் மளிகைக் கடையில் வேலை பார்க்கும் 22 வயது சச்சினைத் தேடி இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் 2020ம் ஆண்டு வாக்கில் கோரொனா தொற்று ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமாகி உள்ளனர். இறுதியில் சச்சினின் காதலில் விழுந்தார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்த சீமா, இங்கு வந்த சீமா கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வாடகைக்கு குடியிருப்பில் ஒன்றாக வாழத் தொடங்கினர்.

அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்வதற்காக வழக்கறிஞர் ஹைதரை அணுகி உள்ளனர். அவர் சீமா- சச்சின் விவகாரக்ம் பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்களை கண்காணித்த போலீஸார் பல்லப்கர் செல்லும் வழியில் காதலர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், சீமாவும் அவரது நான்கு குழந்தைகளும் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தனர். அதனைக் கண்டு நான் திடுக்கிட்டேன். சச்சின் தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அந்தப்பெண் கூறினார். சீமா ஹைதர் பாகிஸ்தானில் குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சவுதி அரேபியாவில் பணிபுரியும் பாகிஸ்தானியர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், நான்கு ஆண்டுகளாக தனது கணவரை சந்திக்கவில்லை என்றும் கூறினார். தனது சகோதரர் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், சிந்து மாகாணத்தில் கைர்பூரில் இருக்கும் தனது பெற்றோருக்கு சொந்தமான வீட்டை ரூ.12 லடசத்திற்கு விற்று சச்சினை திருமணம் செய்து கொள்ள இந்தியா வந்ததாகவும் தன்னிடம் கூறினார்’’ என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதியினர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பிரிஜேஷ், அவர்கள் மே மாதம் வீட்டை வாடகைக்கு எடுத்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து பிரிஜேஷ் கூறுகையில், ‘’அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் சொன்னார்கள். "அப்பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் போல் தெரியவில்லை. அவர் சல்வார் சூட் மற்றும் சேலை அணிந்திருந்தார்," என போலீசாரிடம் தெரிவித்தார்.

சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சினை போலீசார் கைது செய்தனர். "பாகிஸ்தான் பெண்ணும் உள்ளூர் சச்சினும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் நான்கு குழந்தைகளும் போலீஸ் காவலில் உள்ளனர். சீமா மற்றும் சச்சினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்ததும் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என்றும் கூறப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com