கேரளாவில் தீவிரமடையும் நிபா வைரஸ்: 5 பேருக்கு நிபா பாதிப்பு உறுதி!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ்
கேரளாவில் நிபா வைரஸ்

கேரளா மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் பதிவானது. அப்பொழுது 17 பேர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் அப்போது அதிவேகமாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தொற்று மேலும் பரவாமல் இருக்க உதவியது. இந்த நிபா வைரஸ் வௌவால் வகைகளில் இருந்து பன்றிக்கும், பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கும் பரவுவதாக கண்டறியப்பட்டது.

கேரளாவில் லாக்டவுண் போடப்பட்ட பகுதி
கேரளாவில் லாக்டவுண் போடப்பட்ட பகுதி

இந்த வௌவால் வகைகள் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றன. முதன் முதலில் சிங்கப்பூரில் தான் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் தற்போது கேரளாவில் உள்ள கோழிகோடு மாவட்டத்தில் சமீபத்தில் மர்ம காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர்களுக்கு நிபா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய அரசின் குழு
மத்திய அரசின் குழு

அதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரை தனிமைப்படுத்தினர். தற்போது கேரளாவில் 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த கிட்டதட்ட 700-க்கும் அதிகமானோரை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். மேலும் தீவிரமடையாமல் இருக்க அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யும் குழு ஒன்று கேரளாவிற்கு விரைந்துள்ளது.

நிபா வைரஸ் பரிசோதனை, கேரள முதல்வர் பினராயி விஜயன்
நிபா வைரஸ் பரிசோதனை, கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதற்கிடையில் கோழிகோடு மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துகளுக்கு லோக்டவுண் அறிவித்துள்ளது அம்மாநில அரசு. மேலும் மாநிலத்தின் சுகாதாரத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com