நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்கச் சென்ற ஹெலிகாப்டர் மோதி 5 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்ரை காணவில்லை தேடுதல் பணி தீவிரமடைந்தது. சொலும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகாப்டரை காணவில்லை எனக் கூறப்பட்டது. காலை 10 மணி முதல் ஹெலிகாப்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 9NMV எனற ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டு பயணிகள் இருந்ததாகவும் தகவல் அதிகாரி ஞானேந்திர புல் தெரிவித்து இருந்தார்.
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் செவ்வாய்கிழமை காணாமல் போனதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் துண்டிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் 9NMV என்ற அழைப்பு அடையாளத்துடன் கூடிய ஹெலிகாப்டர் காலை 10:12 மணிக்கு ரேடாரில் இருந்து இறங்கியது. காணாமல் போன ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டவர்கள் இருந்தனர். காத்மாண்டுவில் இருந்து தேடுதல் மற்றும் மீட்புக்காக ஆல்டிட்யூட் ஏர் ஹெலிகாப்டர் புறப்பட்டது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டரில் சென்ற 5 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், வானிலையின் மாற்றமே விபத்து காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.